பாலக்கோட்டில் தீபாவளி இனிப்பு காரம் தயாரிப்பு, விற்பனை இடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 நவம்பர், 2023

பாலக்கோட்டில் தீபாவளி இனிப்பு காரம் தயாரிப்பு, விற்பனை இடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு.


தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர்  அவர்கள் வழிகாட்டல் படி, மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு இடங்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு  பாதுகாப்பு விதிமுறைகள்படி நடைமுறை பின்பற்றப்படுகின்றனவா இல்லாத பட்சத்தில் உரிய  நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பாலக்கோடு ஒன்றியத்தில் பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, மற்றும் மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இனிப்பு,காரம் தயாரிப்பு கூடங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே. நந்தகோபால் அவர்கள் ஆய்வு செய்தார். 


ஆய்வில் ஒரு சில தயாரிப்பு கூடங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் இருந்து  அதிக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட காரம் மற்றும் இனிப்பு அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் அச்சிடப்பட்ட செய்தி தாள்களில் காட்சிப்படுத்தப்பட்டுருந்த எண்ணெய் பலகாரங்களை அப்புறப்படுத்தி ,பட்டர் பேப்பர் அல்லது அச்சிடப்படாத பேப்பர்களில் காட்சிப்படுத்ததுதல்,  விநியோகித்தல் மற்றும் பொட்டலம் இடுதல் வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. மாரண்டள்ளியில் ஒரு இனிப்பு தயாரிப்பிடம்  முறையாக  பின்பற்றாதது கண்டு எச்சரித்து உடனடியாக நிவர்த்தி செய்ய வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது.  


பாலக்கோட்டில் ஒர் தயாரிப்பு நிலையத்தில் முந்திரி உள்ளிட்ட சில மூலப் பொருட்கள்  உரிய லேபிள் நடைமுறை பின்பற்றாத அதாவது உரிய விபரங்கள் அச்சிடாத  பாக்கெட்டுகளை வாங்குவது தவிர்க்க வலியுறுத்தி மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேற்படி கடைக்காரர்களுக்கு நியமன அலுவலர் பரிந்துரை பேரில் தலா ஆயிரம் வீதம் இரண்டு கடைகளுக்கு உடனடி அபராதமும் விதிக்கப்பட்டது.   மேலும்  இனிப்பு கார  தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை குறித்த பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad