பாலக்கோடு நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல்- கண்டுகொள்ளாத அதிகாரிகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 நவம்பர், 2023

பாலக்கோடு நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல்- கண்டுகொள்ளாத அதிகாரிகள்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் தினந்தோறும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200 க்கும் மேற்பட்ட பேருந்துகள்  கனரக வாகனங்கள் காய்கறி வாகனம் பள்ளி கல்லூரி பேருந்துகள் ஆட்டோக்கள் என எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக காணப்படும் நிலையில்.


நகரில் சுற்றுவட்டார உள்ளுர் மற்றும் கிருஷ்ணகிரி ஓசூர், ஓகேனக்கல், அஞ்செட்டி, பெங்களூர், சென்னை தருமபுரி, சேலம், கோவை, பழனி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் நகர நெடுஞ்சாலையில் இருபுறமும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப் படுவதால் மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வணிக கடைகள் முன் சாலையில் ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை தாறுமாறாக நிறுத்தப்படுவதால் சாலையில் செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டிகள் உட்பட்ட ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. 

மேலும் மாலை நேரத்தில் பள்ளி கல்லூரி வாகனங்கள் உள்ளிட்டவை வரும்போது மேலும் கடும் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  இந்த நிலையில் அவசர ஊர்திகள் சொல்வதில் கூட பெரும் சிரமத்தையும் சந்தித்து சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.


போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் இந்தநிலை தொடர்கதையாகி பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம்  துரித நடவடிக்கை மேற்கொண்டு போக்வரத்து நெரிசலை கட்டுப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad