பாப்பாரப்பட்டி அருகே செல்போன் கடை உரிமையாளரை தாக்கியதாக மூவர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 நவம்பர், 2023

பாப்பாரப்பட்டி அருகே செல்போன் கடை உரிமையாளரை தாக்கியதாக மூவர் கைது.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் செல்போன் கடை உரிமையாளரை தாக்கியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மற்றொரு புகாரில் தலைமறைவான செல்போன் கடை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பாலவாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு(37) செல்போன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாது மகள் சாந்தி (42) கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போன் பழுதடைந்ததால் சரி செய்வதற்காக பிரபுவின் கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார். 


இதில் சாந்தியின் செல்போனிலிருந்து நம்பரை எடுத்துக்கொண்டு அடிக்கடி பிரபு குறுந்தகவல் அனுப்பியதாகவும், பால்வாடி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பகுதியில் நின்று கொண்டு சாந்தியை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. 


இதனை அறிந்த சாந்தியின் உறவினர்கள் செல்போன் கடை உரிமையாளரான பிரபுவை பாலவாடி ஏரிக்கரை பகுதியில் மிரட்டி ரூ.1.70 லட்சம் ரொக்கம், ஆதார் அட்டை ஏடிஎம் கார்டு ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரபு அளித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் சாந்தியின் உறவினரான மணிவண்ணன் 38 மாது 50 அஜித்குமார் 28 கோவிந்தராஜ் 38 ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். 


இதேபோல் சாந்தி அளித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீஸ் எஸ்.ஐ.முனிராஜ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள செல்போன் கடை உரிமையாளர் பிரபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad