மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 நவம்பர், 2023

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி.


மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

அரசாணை எண்.177 கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்துறை (மீன்5) நாள்13.09.2017 –ன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் 20 மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுததிட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.


கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவ நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணைய தளமான www.fisheries.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை துணை – இயக்குநர் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.


விண்ணப்பதாரர் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய ஆவணங்களுடன் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 18.11.2023 பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், கதவு எண்1-165, இராமசாமி கவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(அஞ்சல்), தருமபுரி, (கைப்பேசி எண்- 9384824260) என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad