பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை அறை திறப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 நவம்பர், 2023

பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை அறை திறப்பு.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறனை கண்டறியும் வகையில் ஒளிபுகா அரை மற்றும் நவீன உபகரணங்களும் கூடிய செவித்திறன் பரிசோதனை அறை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 


இந்த விழாவில் மாவட்டம் மருத்துவ இணை இயக்குனர் நலப் பணிகள் எம் சாந்தி கலந்து கொண்டு ரூ 12 லட்சம் மதிப்பிலான ஒழிப்புகாரை 78 ஆயிரம் மதிப்புள்ள ஆடியோகிராப் கருவி 2.40 லட்சம் மதிப்பிலான நடுசெவி பரிசோதனை கருவி அஞ்சு புள்ளி 54 லட்சம் மதிப்பிலான உள் காது செவித்திறன் பரிசோதனை கருவி ஆகியவற்றுடன் கூடிய அதிநவீன செவித்திறன் பரிசோதனை அறையினை குத்து விளக்கேற்றி திறந்து வைத்து மருத்துவமனையில் பிறந்த நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு செவித்திறன் பரிசோதனையை செய்து தொடங்கி வைத்தார். 


மேலும் அதிநவீன செவித்திறன் பரிசோதனையை தனியார் மருத்துவமனையில் செய்ய 4000 ரூபாய் செலவாகும் எனவும் தற்போது அரசு மருத்துவமனையில் அதிநவீன செவித்திறன் அரைக்கப்பட்டுள்ளதால் பெண்ணாகரம் பகுதி மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 


இந்த விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கனிமொழி காது மூக்கு தொண்டை நிபுணர்கள் மருத்துவர்கள் ஜே பாலாஜி நித்யா உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் அருண் பிரசாத் கேட்பியல் துறை நிபுணர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


- இன்பசேகர்.


கருத்துகள் இல்லை:

Post Top Ad