பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 நவம்பர், 2023

பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.


தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக "சிறப்பு சொற்பொழிவு", "லித்தியம் அயன் பேட்டரிகளை பற்றி  பாதுகாப்பான கையாளுதல் மற்றும் அகற்றும் நடைமுறைகள்" என்ற தலைப்பில்  நடைபெற்றது. 

இதில் முனைவர் சுதாகர் முதன்மை விஞ்ஞானி எலக்ட்ரோ கெமிக்கல் பவர் சோர்ஸ் பிரிவு CSIR மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் காரைக்குடி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார் இதைத் தொடர்ந்து மாணவர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விரிவாக விளக்க அளித்தார் முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் பொறுப்பு முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார் நிகழ்வினை முனைவர் செல்வ பாண்டியன் துறை தலைவர் இயற்பியல் துறை அவர்கள் வரவேற்புரை வழங்கினார் இறுதியாக முனைவர் பிரசாத் உதவி பேராசிரியர் இயற்பியல் துறை அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.


இந்நிகழ்வை முனைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் முனைவர் செந்தில் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் இயற்பியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad