பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டு நல பணித்திட்ட சார்பாக மாபெரும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 நவம்பர், 2023

பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டு நல பணித்திட்ட சார்பாக மாபெரும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டு நலப்பணித்திட்ட சார்பாக "மாபெரும் 3000 மரக்கன்று நடும் விழா" பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பெண்ணாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி அவர்கள் மற்றும் முனைவர் தங்கவேல் பதிவாளர் பெரியார் பல்கலைக்கழகம் சேலம், தர்மபுரி எஸ்பி வெங்கடேஸ்வரன் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அப்பள நாயுடு மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை முனைவர் பிரஷாந்த் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad