தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள கனவனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி ரங்கநாதன்(50) இவர் தேங்கல்மேடு, கரடு, எருதுகூட அள்ளி, கனவனஅள்ளி ஒட்டியுள்ள வன பகுதிகளில் இரவு நேரங்களில் முயல் , காட்டு பன்றி, காடை, கெளதாரி, கீரிபிள்ளை உள்ளிட்ட வன விலங்குகளை நாட்டுவெடி, கூண்டு, கம்பி வலை போன்றவற்றின் மூலம் வேட்டையாடி வந்துள்ளார்.
நேற்று கனவனஅள்ளி அருகே உள்ள வன பகுதியில் வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி மற்றும் வலையுடன் நின்றிருந்தவர், வனகாவலர்களை கண்டதும் ஓட முயன்றார் அவரை பிடித்து விசாரித்ததில் வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரிய வந்தது.
மேலும் அவரது வீட்டை சோதனை மேற்கொண்டதில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய வலை, கம்பி, நாட்டு வெடி மற்றும் உப்புக்கறி உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்த வன துறையினர் ரங்கநாதன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக