முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு அரூர் அரசு மருத்துவமனையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் ரொட்டிகள் வழங்கப்பட்டன.
அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அணியின் தர்மபுரி மாவட்ட தலைவர் இம்ரான் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் அகமது, மாவட்ட துணை செயலாளர் நவ்ஷாத், ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் அக்பர்ஷெரிப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜ் பயாஸ் சுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக