இவர்களுக்கு ஒரு வயதில் மித்ரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. ஆனால் தர்மதுரை எந்த வேலைக்கும் செல்லாமல் மதுகுடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தார். இதனால் கனவன் மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை கனவன் மனைவி இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில் மோகன பிரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்க்கு வந்த மகேந்திரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மோகனபிரியாவின் குடும்பத்தார் மற்றும் உறவிணர்கள் இது திட்டமிட்ட கொலை என்றும் இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணம் ஆகி 2 வருடத்திலேயே இளம் பெண் இறந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் விசாரனை செய்து வருகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக