மாணவ மாணவிகளின் வசதிக்காக சொந்த செலவில் அரசு பள்ளிக்கு நவீன கழிப்பறை கட்டி கொடுத்த தலைமை ஆசிரியர் பள்ளி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 நவம்பர், 2023

மாணவ மாணவிகளின் வசதிக்காக சொந்த செலவில் அரசு பள்ளிக்கு நவீன கழிப்பறை கட்டி கொடுத்த தலைமை ஆசிரியர் பள்ளி.


அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக நவீன கழிப்பறையை பள்ளி தலைமை ஆசிரியர் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் தன்னுடைய சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ள செயலை பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.  

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மோளையானூர் அருகே உள்ள போதக்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மொத்தம் மாணவர்கள் 127 மாணவர்களும், 66 மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த ஏழு ஆண்டுகளாக கழிவறை கட்டிடம் பழுதடைந்து இருந்ததால் பள்ளி மாணவ மாணவிகள் பெரிதும் அவதிக்க ஆளாக நேரிட்டது, இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக இப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் சே பாரதி தற்போது பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  


தலைமை ஆசிரியர் பொறுப்பில் உள்ள சே பாரதி மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு தன்னுடைய சொந்த செலவில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பறையை புதிதாக கட்டிக் கொடுத்துள்ளார்.  குழந்தைகள் தின விழாவை ஒட்டி  இப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (அரூர்) இஸ்மாயில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட நவீன கழிப்பறையை ரிப்பன் வெட்டிதிறந்து வைத்தார்.  


இதைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் சே பாரதியை வெகுவாக பாராட்டி, அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதே சமயத்தில் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த நவீன கழிப்பறையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  


பாப்பிரெட்டிபட்டி வட்டார கல்வி அலுவலர்கள் கோ.பழனி சி.ஜெயகாந்தன், போதக்காடு ஊராட்சி மன்ற தலைவர்  பூங்கொடிமாணிக்கம் பள்ளி இருபால் ஆசிரியர்கள் குளோசியா மா வினோத்குமார் கு.பிரவினா டி.சம்பத் க.கவிதா உடற்கல்வி ஆசிரியர் சுபாஷ், கணினி ஆசிரியை ஜோதி, ஆகியோர்  விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர், போதக்காடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் .பாரதி தன்னுடைய சொந்த செலவில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கு புதியதாக நவீன கழிவறை கட்டித் தந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


- பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் எஸ், கண்ணன்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad