மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளுக்கு செல்லும் மாணவர்கள், பேருந்தை கொடியசைத்து வழியனுப்பி வைத்த தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 நவம்பர், 2023

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளுக்கு செல்லும் மாணவர்கள், பேருந்தை கொடியசைத்து வழியனுப்பி வைத்த தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.


மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளுக்கு  செல்லும் மாணவர்கள்.. பேருந்தை  கொடியசைத்து வழியனுப்பி வைத்த தர்மபுரி  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கலை சார்ந்த திறன்களை வளர்ப்பதற்காக நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்ற 412 மாணவர்கள்  மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர். இம்மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் 21 /11/2023 முதல் 24/11/2023 வரை வேலூர், செங்கல்பட்டு & திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.


 மாநில அளவிலான போட்டிகளுக்கு செல்லும் மாணவர்களை தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. ஜோதி சந்திரா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad