அரூர் பொன்னேரி பஞ்சாயத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகள் பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 நவம்பர், 2023

அரூர் பொன்னேரி பஞ்சாயத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகள் பயிற்சி.


அரூர் நவம்பர் 8 பொன்னேரி பஞ்சாயத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் கலைஞர் கிராமத்தில் வேளாண்மை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகள் பயிற்சி உதவி வேளாண்மை அலுவலர் திரு ரசூல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், வேளாண்மை துறையில் உள்ள மானிய திட்டங்கள் குறித்தும் மற்றும் வேளாண்மை கிடங்கில் உள்ள வேளாண் இடுபொருட்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள், மேலும் இந்நிகழ்ச்சியில் மண் மாதிரி எடுத்தல் அதன் பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் கடன் அட்டை பெறுவது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள், மேலும் இந்நிகழ்ச்சியில் பட்டு வளர்ச்சி துறை இளநிலை ஆய்வாளர் திருமதி ரம்யா அவர்கள் கலந்து கொண்டு பட்டு வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள்.


இந்நிகழ்ச்சியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகம் வேளாண்மை உதவி அலுவலர் திரு தமிழரசு அவர்கள் கலந்து கொண்டு உழவர் சந்தையில் விவசாயிகள் காய்கறி விற்பனை செய்வது குறித்தும்  விளை பொருட்களை எவ்வாறு மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்தும், விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார்கள், மேலும் இந்நிகழ்ச்சியில் உயிர் உரம் விதை நேர்த்தி எவ்வாறு செய்வது என்பதை செயல் விளக்கமாக செய்து காண்பித்தார்கள்.


இந்நிகழ்வில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad