பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி மாணவிகள் போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 நவம்பர், 2023

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி மாணவிகள் போராட்டம்.


பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச். புதுப்பட்டி அரசு மாணவியர் விடுதி பெண் குழந்தைகள் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது


தர்மபுரி மாவட்டம். பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச். புதுப்பட்டியில் அரசு மாணவியர் விடுதி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.


இந்த விடுதியில் 56 பெண்குழந்தைகள் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தங்கி அருகில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று வருகின்றனர், இந்த மாணவியர் அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, புதுப்பட்டி என அருகில் உள்ள கிராமப் பகுதியில் உள்ள  பட்டியல் இன ஏழை வசதி இல்லாத மாணவிகள் ஆகும்.


இவர்கள் தாங்கள் இருக்கும் விடுதியில் குளிப்பதற்கு தண்ணீர் இல்லை, அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விவசாய கிணற்றில் இருந்து பக்கெட்டுகளில் தண்ணீர் எடுத்து வந்து விடுதியில் குளிப்பதாகவும், கழிப்பிட வசதி இல்லாததால் அருகில் உள்ள விவசாய நிலப் பகுதி முப்புதர்கள். ஓடை போன்ற பகுதிகளுக்கு சென்று காலைக்கடனை கழித்து வருவதாகவும், வேதனை தெரிவித்து இன்று காலை 8.30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அடிப்படை வசதிகளை எங்கள் விடுதிக்கு செய்தி தாருங்கள் எனக் கூறி திடீரென விடுதி முன்பு உள்ள நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் மாணவிகளின் பரிதாப நிலை அறிந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், மாணவிகளுக்கு ஏன் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று விடுதி காப்பாளர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது இது குறித்து மாணவிகள் தெரிவிக்கையில், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம், இதுகுறித்து அரசின் கவனத்திற்கும் விடுதி காப்பாளர் இடமும் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை


எனவும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியாமலும். கழிப்பிட வசதி இல்லாததால் காலை கடனை கழிப்பதில் பெரும் சிரமம் உள்ளதாகவும் எனவே உடனடியாக அரசு நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் எங்களுக்கு அடிப்படை செய்திகளை செய்து தர வேண்டும் என்று முறையிட்டனர்


இந்த போராட்டத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த விடுதி காப்பாளர் சித்ரா இது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.


தகவல் அறிந்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா நேரில் சென்று மாணவியரின் குறைகளை கேட்டு அறிந்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக மாணவியர்களுக்கு உறுதியளித்தார், இந்த ஏழை பட்டியல் இன மாணவிகளின் போராட்டத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad