பாப்பாரப்பட்டி மின்சார வாரிய அலுவலகம் முன்பு மின்சாரத்தை தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் போராட்டம்! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 நவம்பர், 2023

பாப்பாரப்பட்டி மின்சார வாரிய அலுவலகம் முன்பு மின்சாரத்தை தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் போராட்டம்!


மின்சார வாரியத்தை தனியாருக்கு கொடுக்க வகை செய்யும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பாப்பாரப்பட்டி உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.


பாப்பாரப்பட்டி எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து கையில் மனுக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக சென்று மின்சார வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பகுதி செயலாளர் ஆர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே விஸ்வநாதன் போராட்டத்தை விளக்கி சிறப்புரையாற்றினார். 


பகுதி குழு உறுப்பினர்கள் ராஜாமணி சக்திவேல் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள்  எம்.சிலம்பரசன், சி.சண்முகம், ஆர்.உமாராணி கிளை செயலாளர்கள் எம்.மணிகண்டன், வி குமார், ஆர்.ராஜமாணிக்கம், எல்லப்பன், எஸ்.ரமேஷ், எம்.ரஜினி, எஸ்.ராஜசேகர், கந்தசாமி, சத்யா, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் டி.தங்கராஜி, நிர்வாகி மணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு கொடுக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 


ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மின்வாரிய அதிகாரிகளிடம் முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரும் மனுக்கள் அளிக்கப்பட்டது. பகுதி குழு உறுப்பினர் கே.லோகநாதன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad