தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி சுற்றுவட்டார பகுதியான பஞ்சப்பள்ளி, கரகூர் புளியந்தோப்பு, பட்டாபிநகர் ஆகிய பகுதிகளில் பழங்குடியின மற்றும் இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர் முகாமில் பழங்குடி இன மற்றும் இருளர் இன மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு அதிக அளவில் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட பழங்குடி நல அலுவலர் கண்ணன் பஞ்சப்பள்ளி. கரகூர் புளியந்தோப்பு, பட்டாபிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடி இன மற்றும் இருளர் இன மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
இதில் பெரும்பாலும் அடிப்படை தேவைகளை சாலை, மின்சாரம், குடிநீர் மற்றும் வீட்டு மனை பட்டா உள்ளிட்ட தேவைகள் குறித்து தெரிவித்தனர். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அது சமயம் பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம் மற்றும் தமிழக ஆதிவாசிகளின் வளர்ச்சி கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சதாசிவம் மாவட்ட துணை செயலாளர் முத்தன் மற்றும் மாரேகவுண்டர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக