இவ்விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ. கோவிந்தசாமி அவர்கள் கலந்து கொண்டு புதிய மாட்டுத் தீவனங்களை அறிமுகம் மற்றும் விற்பனை செய்து வாழ்த்தி பேசினார். தமிழக விவசாயிகள் சங்க தலைவர் திரு.எஸ். ஏ. சின்னசாமி மாட்டுத் தீவனத்தைப் பெற்றுக் கொண்டு பாராட்டி பேசினார்.
இவ்விழாவுக்கு பெங்களூரு ஐசிசிஓஏ நிறுவன கண்காணிப்பாளர் திரு.எம்.பிரசாந்த், உங்கரான ஊராட்சி மன்றத் தலைவர் வேடியப்பன், முக்கல் நாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. சுமதி காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வேளாண்மை உதவி இயக்குனர் திரு.மு. இளங்கோவன், சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் திரு.ஏ. சரவணன் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள், தருமபுரி உணவு வங்கியின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
இந்நிகழ்வில் அதியன் அவ்வை உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள், பங்குதாரர்கள், இப்பகுதியைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக திருமதி. தேவகி பரமசிவம் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக