பாஜக அதிமுக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது, ஆனால் திமுகவினரோ கூட்டணி இருப்பது போல பிதற்றுகின்றனர். - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 நவம்பர், 2023

பாஜக அதிமுக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது, ஆனால் திமுகவினரோ கூட்டணி இருப்பது போல பிதற்றுகின்றனர். - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.


தருமபுரியில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய முன்னாள் முதலமைச்சர்  திரு. எடப்பாடி பழனிச்சாமி, மணமக்கள் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு, பல்லாண்டு காலம் வாழ வேண்டும், ஜாதிக்கும், மதங்களுக்கும் அப்பார்ட்ட கட்சி தான் அதிமுக, பாஜக கட்சிக்கு அதிமுக மறைமுகமாக உறவு இருப்பதை போல கூறுகின்றனர், பாஜக அதிமுக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது, ஆனால் திமுகவினரோ கூட்டணி இருப்பது போல பிதற்றுகின்றனர், விவசாயிகள் நிறைந்த மண் தருமபுரி மண், தருமபுரி மாவட்டத்திற்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக திட்டத்தை நிறேவற்றாதவர்கள் திமுக.


விவசாயத்திற்கு நீர் ஆதாரம் முக்கியம், தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவருவது உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக ஆனால் அந்த திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது, திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வந்தது கர்ப்பணி பெண்களுக்கான திட்டம் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம், அம்மா கிளினிக் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக இந்த திட்டங்களை மூடி முடக்கியவர்கள் திமுகவினர்.

முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நீட்டை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் நீட்டை கொண்டு வந்தது காங்கிரசும் திமுக வும் தான் ஆனால் நீட்டை எதிர்ப்பவர்களும் இதே காங்கிரசும் திமுகவு தான் என்ன வேடிக்கை பாருங்கள். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக ஏழை எளியோருக்கான கட்சி அதிமுக.. மக்கள் ஏற்றம் பெறவேண்டும், ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும்.


பொங்கல் பண்டிகயைினை மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் தொகுப்பை கொண்டு வந்தது அதிமுக ஆனால் மக்கள் பயன்படுத்த முடியாதபடி பொருட்களை கொடுத்து ஊழல் செய்தவர்கள் திமுக எங்கு பார்த்தாலும், போதை பொருட்கள் சாதாரமாக புழுங்குகிறது, கொலை, கொள்ளை நடக்கிறது, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது.


திமுகவினர் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றபடவில்லை, மகளிருக்கு உரிமை தொகை ஆயிரம் தரபோவதாக கூறினார்கள், ஆனால் தகுதியானவர்களுக்கு ஆயிரம் என்றார்கள் அறவழியல் போராடுகின்ற விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது, இதை வன்மையாக கண்டிக்கிறேன், அதிமுக ஆட்சி காலத்தில் எத்தனையோ போரட்டங்கள் நடைபெற்றிருக்கின்றனர்.


திமுக அமைச்சர் ஒருவர்  ஆடியோ ஒன்றினை வெளியி்ட்டிருந்தார், அதில் 30 ஆயிரம் கோடி ரூபாயை உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் வைத்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருப்பதாக பேசியிருந்தார், இப்படி தான் திமுக குடும்ப கம்பெனி கட்சி கொள்ளையடித்து, ஊழல் செய்து கொண்டிருக்கிறது,  அதிமுக அப்படி அல்ல இன்றைக்கு யார் வேண்டுமானாலும் முதலமைச்சராக வரலாம், அனைவருக்குமான கட்சி தான் அதிமுக மக்கள் இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கிறார்கள் வரவிருக்கின்ற நாடாளுமனற தேர்தலில் திமுகவினருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad