தருமபுரி மாவட்டம் அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சேலம் சரக டி.ஐ.ஜி., எஸ்.ராஜேஸ்வரி நேற்று ஆண்டாய்வு தொடர்பாக வருகை தந்தார். அப்போது அவர் டி.எஸ்.பி. ஜெகன்நாதனுடன் அரூர் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களின் செயல்பாடுகள் ,வழக்குகள் குறித்து துறை சார்ந்த ஆய்வு மேற்க் கொண்டார்.
தொடர்ந்து அரூர் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்கள் சார்பில் 5 இடங்களில் காவல்துறை சார்பில் பள்ளிகளில் சிறுவர் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகின்றது. இம்மன்றங்களில் ஒன்றான கடத்துார் காவல் நிலையத்திற்குட்பட்ட அஸ்தகிரியூர் அரசு நடுநிலைப் பள்ளி சார்ந்த மன்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
ஆய்வின் போது அரூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக