நடப்பாண்டில் அரவை நடைபெறுவதற்கு ஆலையில் 10,000 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் 3,25,000 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரவை பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரம் வரை 70 நாட்கள் நடைபெறும். விவசாய தோட்டத்திலிருந்து ஆலை அரைவுக்கு கரும்பினை கொண்டு வர 200 வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஆள் பற்றாக்குறை, கூலி குறைக்க இரண்டு இயந்திரங்கள் மூலம் கரும்பு அறுவடை செய்யப்படுகின்றது. விவசாய தோட்டத்திலிருந்து ஆலை அரைவுக்கு கரும்பினை கொண்டு வர 200 வண்டிகள் ஈடுபடுத்தபட்டுள்ளன. இந்நிலையில் விவசாய தோட்டத்திலிருந்து கரும்பு ஏற்றி வரும் வாகனங்களுக்கு போதிய வாடகை கிடைப்பதில்லை என்று கூறியும், டீசல் விலை உயர்வு கூடிக் கொண்டே இருப்பதால் வாடகை உயர்த்தி தர வேண்டும் என்று நேற்று இரவு கரும்பு ஏற்றி வந்த ஓட்டுநர்கள் சர்க்கரை ஆலை உள்ளே நிறுத்திவிட்டு வெளியே வந்து விட்டதால் கரும்பை எடை போட்டு அரவைக்கு கொண்டு செல்லும் பணியில் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனால் இரண்டு மணி நேரம் அரைவு பணி நிறுத்தப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது, அரவை பணி நிறுத்தப்பட்டது குறித்து சர்க்கரை ஆலையின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது, சர்க்கரை ஆலையின் கோட்டாட்சியர் வெளியில் சென்றிருந்ததால் பேச்சுவார்த்தைக்கு நடத்த யாரும் இல்லாத சூழ்நிலையில் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டுனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது கோட்டாட்சியர் வெளியே சென்றிருப்பதால் இரண்டு நாட்கள் பொருத்து உங்களுடைய குறைகள் நிர்வாகத்திற்கு கொண்டு சென்ற பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் அளித்ததால் மீண்டும் அரவை பணி தொடங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக