ஆலைக்கு கரும்பு பதிவு செய்யும் அங்கத்தினர்களுக்கு பரு நாற்று மூலம் நடவு மேற்கொண்டால் ஏக்கர் ஒன்றுக்கு நடவு மானியமாக ரூ.5000/-, ஒரு பரு நாற்று நடவு மேற்கொண்டால் ஏக்கர் ஒன்றுக்கு நடவு மானியமாக ரூ.1500/- மற்றும் கரும்பு அறுவடைக்கு பின் கரும்பு சோகையை தூளாக்கினால் ஏக்கர் ஒன்றிற்கு ரூ.700/- வீதமும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அரசின் மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் நடப்பு அரவைப்பருவத்தில் உற்பத்தியாகும் ஆலை கழிவு மண்ணிணை கடந்த 2022-23 அரவைப்பருவத்திற்கு கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களுக்கு சப்ளை செய்த கரும்பில் 10 டன்களுக்கு ஒரு டன் என்ற அடிப்படையில் ஈர ஆலை கழிவு மண் உற்பத்தியாகும் இடத்திலிருந்து நேரடியாக பிடித்துச்செல்ல இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆகவே மேற்கண்ட சலுகைகளை பயன்படுத்தி கரும்பு உற்பத்தினை அனைத்து அங்கத்தினர்களும் / விவசாயிகளும் கரும்பு பயிர் செய்தும் கரும்பு வெட்டுக்கூலியினை குறைத்திடும் வகையில் இயந்திர அறுவடையினை ஊக்கப்படுத்திடும் விதமாகவும் ஏக்கருக்கு அதிக உற்பத்தி பெற்றிடும் வகையில் அகல பார் முறையில் 4 1/2 அடி இடைவெளியில் பார் அமைத்து கரும்பு நடவு செய்து ஆலைக்கு கரும்பு பதிவு செய்து மேற்கண்ட மானியங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது, என சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக