பாலக்கோடு காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் அவர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 நவம்பர், 2023

பாலக்கோடு காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் அவர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர்.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் கடந்த மாதம் சுமார் 5 கிலோ தங்கம் மற்றும் 60 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த 72 போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் பாலக்கோடு இன்ஸ்பெக்டர் மாவட்ட கண்காணிப்பாளர் பாரட்டி சான்றிழை வழங்கினார். 

தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே   கடந்த மாதம்  28-ம் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு நகைகள் வாங்கிச் சென்ற பிரசன்னா என்பவரை பின்தொடர்ந்து வந்த  கொள்ளை கும்பல், காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி அருகே, காரை வழிமறித்து கடுமையாக தாக்கி காருடன் 5.9 கிலோ தங்கம் மற்றும்  பணம் 60 லட்சம் ரூபாய் கடத்தி சென்றனர். 


இதனை அடுத்து பிரசன்னா காரிமங்கலம் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தனிப்படை போலீசார் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிரமாக பல்வேறு மாநிலங்களில் செல்போன் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளை  சம்பவத்தில் ஈடுபட்ட கேரளா மாநிலத்தை 15 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களிடமிருந்து தங்கம் 5. 9 கிலோ தங்கம் மற்றும்  19 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட 72 போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் பாலக்கோடு இன்ஸ்பெக்டர் மாவட்ட கண்காணிப்பாளர் பாரட்டி சான்றிழை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad