தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீடுகள் பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 நவம்பர், 2023

தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீடுகள் பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் பேரூராட்சி போடூர் திட்டப்பகுதி, பொ.மல்லாபுரம் பேரூராட்சி அருகில் உள்ள கொண்டஹரஹள்ளி திட்டப்பகுதி, அரூர் அருகில் உள்ள நம்பிப்பட்டி & பீச்சான்கொட்டாய் திட்டப்பகுதி, காரிமங்கலம் அருகில் உள்ள முக்குளம் திட்டப்பகுதி மற்றும் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வுசெய்யப்பட உள்ளதால் 

  • தருமபுரி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட திட்டப்பகுதிக்கு அருகில் வசித்து வரும் சொந்த வீடில்லாத பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குடும்பத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளார் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், குடும்பத்தாரின் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
  • பயனாளிகள் ஆண்டு வருமானம் 3 இலட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
  • இக்குடியிருப்புக்கு அரசினால் நிர்ணயிக்கப்பட்ட பயனாளி பங்கீட்டு வாரியத்திற்கு முன் பணமாக செலுத்த வேண்டும்
  • குடும்பத்தினருக்கு, சொந்த வீடோ, நிலமோ இல்லை எனவும் அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தகைக்கு விட மாட்டேன் என்ற உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க  வேண்டும்.
  • விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட திட்டப்பகுதிகளில் 04.12.2023 க்குள் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

வ.எண்

திட்டப்பகுதி

தகுதியுடைய வகுப்பினர்

பயனாளி பங்கீட்டுத் தொகை (இலட்சத்தில்)

1

நம்பிப்பட்டி

ஆதிதிராவிடர் இன வகுப்பினர் மட்டும்

1.56 இலட்சம்

2

பீச்சான்கொட்டாய்

1.65 இலட்சம்

3

கொண்டகரஹள்ளி

1.52 இலட்சம்

4

போடூர்

1.30 இலட்சம்

5

முக்குளம் 

அனைத்து வகுப்பினர் 

1.80 இலட்சம்

6

அதியமான்கோட்டை

2.42 இலட்சம்

என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad