மாக்கனூர் கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 நவம்பர், 2023

மாக்கனூர் கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்


தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஒன்னப்பகவுண்டனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது இதில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி மற்றும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் ஆகியோர்கள் இந்த முகாமினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.


மேலும் இந்த முகாமில் பெண்கள் நல மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் காது மூக்கு தொண்டை மருத்துவம் தோல் மற்றும் பால்வினை நோய்களுக்கான மருத்துவம் கண் பரிசோதனை எலும்பு முறிவு மருத்துவம் பல் மருத்துவம் இலவச சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை பொது மருத்துவம் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பரிசோதனை சித்த மருத்துவம் ஸ்கேன் மற்றும் இசிஜி பரிசோதனை தொற்று நோய்களுக்கான சேவைகள் நீரிழிவு உயர் ரத்த அழுத்தம் வாய் புற்றுநோய் பரிசோதனை நடைபெற்றது.


இதில் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் நல்லம்பள்ளி ஒன்றிய குழு பெருந்தலைவர் மகேஸ்வரி பெரியசாமி பாமக மாநில செயற்குழு உறுப்பினர் சுதா கிருஷ்ணன் ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி சேதுமுருகன் பிக்கிலி ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில் சிலம்பரசன் பிரசாந்த் சரவணன் மதியழகன் மற்றும் மருத்துவம்அல்லா மேற்பார்வையாளர் பழனிவேல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆயிரம் மற்றும் மாக்கனூர்  மாங்காபட்டி சிட்லகாரம்பட்டி தட்டாரப்பட்டி ஓ ஜி அள்ளி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த முகாமில் மருத்துவர்கள் பல்வேறு நோய்களுக்கான பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி மருத்துவம் பார்த்துச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad