தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக வங்கி பற்று அட்டைகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 நவம்பர், 2023

தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக வங்கி பற்று அட்டைகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.


இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி, P.M. குப்புசாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7,35,058 மகளிர் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் பணியினை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்தார்கள்.


இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி, P.M. குப்புசாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (10.11.2023) கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமைவகித்தார்கள்.


இவ்விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கென எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசால் உயர்கல்வி கற்க வருகின்ற பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கிடும் புதுமைப் பெண் திட்டம், மகளிர் கட்டணமில்லாமல் நகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள விடியல் பயணத்திட்டம், பள்ளிக்கு வருகின்ற குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கிடும் அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், 1.06 கோடி மகளிர் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கி வைத்து, தற்போது உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.


இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1048 ரேஷன் கடைகளின் 4,68,062 குடும்ப அட்டைதாரர்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டி வரப்பெற்ற 3,92,354 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 2,69,636 ( சுமார் 72%) மகளிர் பயன்பெறும் வகையில் 15.09.2023 அன்று கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. மேலும், தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி வருவாய் வட்டத்தை சார்ந்த 2000 மகளிருக்கு அன்றைய தினம் வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விடுபட்டவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, தற்போது புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்ட 7.35 இலட்சம் மகளிர் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் ரூ.1.000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை தொடங்கிவைத்து, உரிமைத்தொகை வழங்கும் விதமாக மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள்.


இதனை தொடர்ந்து இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தருமபுரி மாவட்டத்தில், இன்றைய தினம் நடைபெறும் இவ்விழாவில் ஏற்கனவே விண்ணப்பித்து பரிசீலினையில் உள்ள மகளிரின் விண்ணப்பங்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்டு, 12,972 மகளிர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பயன்பெறும் வகையில் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின்கீழ், வரப்பெற்ற 25,370 மேல்முறையீடு விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்து, அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு அடுத்த கட்டமாக உரிமைத்தொகை டிசம்பர் மாதம் வழங்கப்படும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.


தருமபுரி மாவட்டத்தில் மகளிர் கட்டணமில்லாமல் நகரபேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் வண்ணம் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 7 கோடியே 68 இலட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 11,252 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த ஆண்டு மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்ததை தொடர்ந்து, நிதி ஒதுக்கீடு செய்கின்ற பணி நடைபெற்று வருகின்றது. விரைவில் திட்டம் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதுபோன்ற மகளிருக்கென பொருளாதார முன்னேற்றம் சார்ந்த திட்டங்கள் மற்றும் மக்களின் நலனுக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் மென்மேலும் முன்னேற்றமடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.


இந்நிகழ்வில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஜி.சேகர், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் திரு.பி.சி.ஆர்.மனோகரன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.வ.உதயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, வருவாய் வட்டாட்சியர்கள் திரு.ரமேஷ், திரு.ஜெயசெல்வன் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கலைஞர் உரிமை திட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad