தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் / பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. தி. வேல்முருகன் அவர்கள் தலைமையில் அரசு உறுதிமொழிகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. கா.அண்ணாதுரை அவர்கள், சேலம் (மேற்கு) சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா.அருள் அவர்கள், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.கே.மோகன் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு. பெ.ராமலிங்கம் அவர்கள், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அ.செ.வில்வநாதன் அவர்கள் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் இன்று (29.11.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மற்றும் செய்தியாளர் சந்திப்பின்போது, அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக் குழுவானது இன்றைய தினம் தருமபுரி மாவட்ட அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் குறித்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் உறுதிமொழிகள் மீது கள ஆய்வுகளை மேற்கொண்டு, பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் உரிய பதில்கள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள பல்வேறு குழுக்களில் உறுதிமொழிக்குழுவானது முக்கியமான குழுவாகும். சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு பல்வேறு அடிப்படை தேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணித் தேவைகளை கோரிக்கையாக முன்வைப்பார்கள். சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து, உறுதியளித்த பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக இக்குழுவானது விரிவான ஆய்வும், திட்டப்பணிகள் உரிய நிதி மதிப்பீட்டில் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்பட்டதா எனவும் ஆய்வு மேற்கொள்ளும்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு உறுதிமொழிகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விவர அறிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் உறுதியளிக்கப்பட்ட கேள்விகளின் மீது அரசு உறுதி மொழிக்குழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த முறை அரசு உறுதிமொழிக் குழுவினால் பதிவு செய்யப்பட்ட 59 உறுதிமொழிகளில் 18 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு உறுதிமொழியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 உறுதிமொழிகள் நிலுவையில் உள்ளன.
நடப்பு உறுதிமொழிக்குழுவினால் 158 உறுதிமொழிகள் பதிவு செய்யப்பட்டு, 103 உறுதிமொழிகள் நிலுவையில் உள்ளன. அரசு நிர்வாகம் என்பது ஒரு வெளிப்படை தன்மை வாய்ந்த நிர்வாகமாக இருத்தல் வேண்டும். இக்குழுவானது தருமபுரி மாவட்டத்திற்கு வருகைதந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு, இன்றைய தினம் உறுதிமொழிகள் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டத்தை மேற்கொண்டுள்ளது.
இக்கூட்டத்தில் தொடர்புடைய துறை அலுவலர்களின் விவர அறிக்கை பெறப்பட்டு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்கள் தெரிவித்தார்கள். இந்த ஆய்வுக்கூட்டத்தில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார், மாவட்ட வன அலுவலர் திரு.அப்பல்ல நாயுடு இவப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர்/மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.பிரியா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இணைச் செயலாளர் திரு. மு.கருணாநிதி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைச் செயலாளர் திரு. ஸ்ரீரா.ரவி, தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை தலைமை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக