திரைப்பட நடிகர் சிங்காரவேலு வரவேற்றார். நிர்வாகிகள் குழந்தைவேல் முருகேசன், வக்கீல் மாதையன், செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய துணைத் தலைவர் திருப்பூர் எம்.பி சுப்பராயன், கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.அறம் ஆகியோர் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றினர்.
ஏஐடியூசி மாநில தலைவர் காசி விஸ்வநாதன், கவிஞர் ரவீந்திரபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கலைச் செல்வம், நிர்வாகிகள் தேவராஜன், தமிழ் குமரன், மாதேஸ்வரன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் கருத்தரங்கில் பேசினர். விழாவில் கவிஞர். தமிழ்ஒளி, மூத்த தொழிற்சங்க தலைவர் எஸ்.எஸ்.தியாகராஜன் ஆகியோர் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்டத் துணைத் தலைவர் சுதர்சனம், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மணி, சிவன், ராஜி, புள்ளாரு, கோவிந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்பு முதலில் தெருவில் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்த எம்பி சுப்பராயன் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் அவரது சமாதிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் வீரபத்ரன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக