கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டா மாறுதல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுகொண்டார்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 நவம்பர், 2023

கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டா மாறுதல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுகொண்டார்கள்.


தருமபுரி அரசு கலைக்கல்லூரியில், கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டா மாறுதல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுகொண்டார்கள்.

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில், கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டா மாறுதல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (21.11.2023) தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுகொண்டார்கள்.


இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா 2023 ஜீன் மாதம் முதல் 2024 ஜீன் மாதம் வரை நடைப்பெறுவதை முன்னிட்டு,தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள் நடத்திட முடிவு செய்யப்பட்டது. 


தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி மற்றும் அரூர் கோட்டத்தில் தலா ஒரு சிறப்பு பட்டா முகாம்கள் நடத்திட முடிவுசெய்யப்பட்டு, இன்றைய தினம் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள் தருமபுரி கோட்டத்திற்கு தருமபுரி அரசு கலைக்கல்லூரியிலும், அரூர் கோட்டத்திற்கு அரூர் பொன் கற்பகம் திருமண மண்டபத்திலும் நடைபெற்றது.


இம்முகாம்களில் நில உடமை தொடர்பான அனைத்து பிரச்சனைகள், UDR- திருத்தம், பட்டா மேல்முறையீடு, பட்டாவில் உள்ள பிழை திருத்தம், பட்டாவில் உள்ள பெயர் திருத்தம், நத்தம் நிலவரிதிட்ட புது பட்டா, கணிணி சிட்டாவில் ஏற்பட்டுள்ள பிழை திருத்தம், இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்டவைகள் குறித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.


தருமபுரி வருவாய் கோட்டத்திற்கென நடைபெற்ற சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் தருமபுரி வட்டத்திற்கு 1,067 மனுக்களும், நல்லம்பள்ளி வட்டத்திற்கு 797 மனுக்களும், பாலக்கோடு வட்டத்திற்கு 591 மனுக்களும், காரிமங்கலம் வட்டத்திற்கு 312 மனுக்களும், பென்னாகரம் வட்டத்திற்கு 752 மனுக்களும் என மொத்தம் 3,519 மனுக்கள் பெறப்பட்டது.


மேலும் அரூர் வருவாய் கோட்டத்திற்கென நடைபெற்ற சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் அரூர் வட்டத்திற்கு 1,277 மனுக்களும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு 991 மனுக்களும் என மொத்தம் 2,268 மனுக்கள் பெறப்பட்டது. இன்றைய தினம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டா மாறுதல் முகாம்களின் வாயிலாக மொத்தம் 5,787 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இம்மனுக்கள்  அனைத்தும் முறையாக கள ஆய்வுகள் மேற்கொண்டு உரிய தீர்வுகள் காண அறிவுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, வட்டாட்சியர்கள் திருமதி.பார்வதி, திரு.ஜெயசெல்வம், திரு.ரமேஷ், திரு.ராதாகிருஷ்ணன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad