சிறப்பு பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய தருமபுரி வட்டார விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 நவம்பர், 2023

சிறப்பு பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய தருமபுரி வட்டார விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.


பாலக்கோடு வட்டாரத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு 2023- 24 பருவத்திற்கான நெல் (II) சம்பா பருவம் (ஆகஸ்ட் 2023 முதல் நவம்பர் 15.11.2023 வரை விதைப்பு) பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்யலாம். குறுவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்ட பயிர்களை சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதியானவர்கள்.

பயிர் கடன் பெறும் விவசாயிகளும் இதில் சேர்த்துக்கொள்ளபடுவர். மற்ற விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் சேரலாம். விதைப்பு தவிர்த்தல், விதைப்பு தோல்வியுறுதல், பயிரிட அபாயம் ஏற்படும் சூழ்நிலையில், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர்காலத்தில் பயிர் இழப்பு, அறுவடைக்குப்பின் ஏற்படும் மகசூல் இழப்பு, புயல்,ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை இடற்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்பு ஆகியவற்றிற்கு காப்பீடு வழங்கப்படுகிறது.


பயிர் காப்பீடு செய்ய தேவைப்படும் ஆவணங்கள் பின்வருமாறு :

முன்மொழிவு படிவம் (PROPOSAL FORM), பதிவு படிவம்,சிட்டா அடங்கல் (அ) பயிர் சாகுபடி சான்று ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக முன் பக்க நகல்.


பயிர் காப்பீடு தொகை, பிரீமியம் தொகை மற்றும் காலக்கெடு :


எனவே நெல் (II) சம்பா பருவம் பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், இத்திட்டத்தில் பெருமளவில் சேர்ந்து பயனடையமாறு பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.மா.அருள்மணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad