பாலக்கோடு கணபதிகொட்டாய் கிராமத்தில் சட்டவிரோதமாக அரசு மது பாணம் விற்ற பெண் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 நவம்பர், 2023

பாலக்கோடு கணபதிகொட்டாய் கிராமத்தில் சட்டவிரோதமாக அரசு மது பாணம் விற்ற பெண் கைது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு  போலீசாருக்கு இரகசிய  தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து   போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாலக்கோடு அடுத்த கணபதி கொட்டாய் கிராமத்தில் வீட்டில் வைத்து அரசு  மதுபானங்களை சட்டவிரோதமாக  விற்பனை செய்வது  தெரிய வந்தது. அவரை  பிடித்து விசாரித்ததில்  சாவித்திரி  (வயது. 50 ) என்பதும்  அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும்  தெரிய வந்தது, அவரை கைது செய்த பாலக்கோடு   போலீசார் அவரிடமிருந்த 2 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்புள்ள 180 மில்லி அளவுள்ள    17குவாட்டர்  பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad