தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேருராட்சியில் கவுன்சிலர்களின் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்திற்க்கு செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார்.
தலைமை எழுத்தர் சம்பத் பேரூராட்சியின் வரவு செலவு அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் மத்திய, மாநில நிதியை பெற்று வளர்ச்சி பணிகள் செய்யவும், சாக்கடை கால்வாய்களை தூர் வாரி கொசு மருந்து தெளித்து கொசுக்களை கட்டுபடுத்தவும், தெருக்களில் உள்ள மின் கம்பங்களில் பழுதாகி உள்ள மின் விளக்குகளை மாற்றவும், பஸ் நிலையங்களிலும், நடைபாதைகளிலும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக