இதில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை, உதவி பேராசிரியர் முனைவர் கண்ணதாசன், அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். இவர் தனது உரையில் இலக்கியத்தில் நிறம்பி இருக்கக்கூடிய எண்ணிலடங்கா நீதிநெறிகள் பற்றியும், அவை எழுத்தாளர்களால் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ள விதம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணாக்கர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கமளித்தார்.
தொடர்ந்து ஆங்கில இலக்கிய மன்றத்தின் இந்த ஆண்டிற்கான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் முறையே தலைவராக தாமரைச்செல்வன், துணைத் தலைவராக கயல்விழி, செயலாளராக ரூபினி பொருளாராக ரித்திகா உறுப்பினர்களாக நிவேதிதா, கோகுல் செல்வம் மற்றும் அஸ்வினி ஆகியோர் சிறப்பு விருந்தினர் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார்.
தொடர்ந்து ஆங்கிலத்துறை தலைவரும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ் துவக்கவுரையாற்ற, முனைவர் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக முதலாம் ஆண்டு மாணவி செல்வி பூஜா ஸ்ரீ நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மாணவி ரித்திகா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைக்க, இறுதியாக இரண்டாம் ஆண்டு மாணவன் தாமரைச்செல்வன் நன்றி உரை வழங்கினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அன்புச்செல்வன், ரூபிணி ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக