தருமபுரி மாவட்டம், அரூரில் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பால் பெனடிக் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் உதவிப் பேராசிரியர் ம.பழனிசாமி பேசியதாவது : பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான, ஆர்வமுள்ள பாடப் பிரிவுகளை தேர்வு செய்து படிக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கு கல்வி கற்றல் என்பது மகிழ்ச்சியாக இருக்கும். அதே நேரத்தில் படித்த முடித்த பிறகு வேலைக்கு செல்லும் போதும் அந்த வேலையில் ஈடுபாடுகள் இருக்கும். மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மட்டுமே அதிக முக்கியம் அளிக்கப்படுகிறது.
மருத்துவம், பொறியியல் பிரிவுகள் அல்லாத பிற பாடப் பிரிவுகளிலும் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பல்வேறு வேலை வாய்ப்புகள் மற்றும் அதிக மாத ஊதியம் பெறும் நிலையுள்ளது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிப்பை தேர்வு செய்யும்போதே எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்து தங்களின் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்து உயர்கல்வியில் சேர வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஏ.செல்வராஜ், ஆசிரியர்கள் தீ.மாசேதுங், அரவிந்தகுமார், தீர்த்தகிரி, 200 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக