அணுகுசாலை (சர்வீஸ் சாலை) அமைக்ககோரி மனு அளித்த கிராம மக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 நவம்பர், 2023

அணுகுசாலை (சர்வீஸ் சாலை) அமைக்ககோரி மனு அளித்த கிராம மக்கள்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கடமடை, எர்ரனஅள்ளி, கிருஷ்ணன் கொட்டாய் கிராம மக்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கர்நாடக மாநிலம் நெரலூருவிலிருந்து தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை வரை நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தர்மபுரி பாலக்கோடு சாலையில் உள்ள கடமடை கிராமத்தில் சர்வீஸ் ரோடு அமைக்க கையப்படுத்திய இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் தற்போது மரக்கன்றுகள் நடவு செய்ய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். சர்வீஸ் ரோடு அமைக்காவிட்டால் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு டிராக்டர் உள்ளிட்ட விவசாய கருவிகளை கொண்டு செல்லவும், விவசாய விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும் முடியாது. 


அதே போல மூன்று கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளவர்களும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும் வந்து செல்ல முடியாது. எனவே சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் அமைப்பதை விடுத்து தார்சாலை அமைத்து தரவேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad