தருமபுரி இலவச வீட்டுமனை பட்டா கேட்டு இருளர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 நவம்பர், 2023

தருமபுரி இலவச வீட்டுமனை பட்டா கேட்டு இருளர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு.


இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கரகூர் இருளர் இன மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர், மனுவின் விபரம் பின்வருமாறு, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி ஊராட்சிக்குபட்டது கரகூர் கிராமம். இங்கு  100 க்கும்மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசித்துவருகின்றனர். மற்றோரு பகுதியினர் அறநிலை துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.


இவர்களுக்கு சொந்த விவசாய நிலம் இல்லை, வனத்தில் தேன் அழிப்பது,சுண்டக்காய் சேகரிப்பது, காய்ந்த பிறகு சேகரித்து விற்பது, மேலும் விவசாயகூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்திவருகின்றனர்.


இரண்டு தலைமுறையாக குடிசை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.மழைகாலம் வந்தால் குடிசை வீட்டிற்குள் தண்ணீர் வருகிறது.அரசு வழங்கும் வீடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க புறம்போக்கு இடத்தில் வசிப்பதால் நாங்கள்  தகுதியற்ற நபர்களாக மாறிவிடுகின்றனர்.


எனவே புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு மனைப்பட்டா வழங்கவேண்டும் அறநிலைதுறைக்கு சொந்தமான இடத்தில் வசிப்பவர்களுக்கு வேறு இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அரசு தொகுப்பு வீடு வழங்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad