புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை, மிரட்டி சீரழித்த காவல் உதவி ஆய்வாளர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 நவம்பர், 2023

புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை, மிரட்டி சீரழித்த காவல் உதவி ஆய்வாளர்.


பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலி மேடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், ஓசூர் பேடரள்ளி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 2020 ம் ஆண்டு குழந்தை திருமணம் செய்யப்பட்டு, தற்போது  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.


இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அதில் ஏரியூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் (55), விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார். 


விசாரணையின் போது புகார் அளித்த சிறுமியின் தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்ட சகாதேவன், முதலில் மிரட்டியும், பின்பு அதையே காரணம் காட்டியும், பாலியல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பாலியல் தொடர்பு குறித்து சிறுமியின்  கணவருக்கு தெரிந்ததால், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக ஹெல்ப்லைனுக்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை காப்பகத்தில் சேர்த்தனர். தொடர்ந்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன் வழிகாட்டுதலின்படி மனைவியின் மீது, சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதற்காக, பலி வாங்கும் நடவடிக்கையாக, சிறுமியை திருமணம் செய்ததாக சிறுமியின் கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.


காப்பகத்தில் இருந்த குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்துள்ள புகாரில் ஏரியூர் காவல் நிலைய சிறப்பு உதவியாளர் சகாதேவன் தன்னிடம் மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டார் என தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். 


பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமி, நீதிபதியிடம்  அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவனை ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad