கடத்தூரில் விசிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 நவம்பர், 2023

கடத்தூரில் விசிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்


தர்மபுரி மாவட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  சார்பில் ஆலோசனை கூட்டம் வெல்லும் சனநாயக மாநாடு மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம். ஒன்றிய செயலாளர் பாளையா தலைமையில் நடைபெற்றது, இதில் டிசம்பர் 23ம் தேதி திருச்சியில் நடைபெறும் வெல்லும் சனநாயக மாநாட்டுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சிப் பணி எவ்வாறு செய்திட வேண்டும், அனைவரும் நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக களப்பணி ஆற்றிடவேண்டுமென தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில் முன்னாள் மண்டல செயலாளர் நந்தன். மண்டல செயலாளர் தமிழ் அன்வர், தொழிலாளர் விடுதலை முன்னணி சென்னகிருஷ்ணன், பேரூராட்சி துணைத் தலைவர் வினோத் உள்ளிட்ட மாவட்ட. ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad