மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு துணை சட்டப்பணிகள் பாதுகாப்பு குழு கவுன்சில் திரு.பாலு வழக்கறிஞர் பார்த்திபன், உதவி மாவட்ட சட்டப்பணிகள் பாதுகாப்பு கவுன்சில் செல்வி சுபஷிரி, சட்டப்பணிகள் பாதுகாப்பு ஆணைக்குழு நிர்வாக அலுவலர் கோகிலா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் சார்பில் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அரசியலமைப்பு முகப்புரை யினை சட்டக்கல்லூரி முதல்வர் முனைவர் சிவதாஸ் தலைமையில் ஏற்றுக் கொண்டனர். மேலும் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பேச்சு, ஓவியம், வினாடி வினா, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் 200க்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிறைவாக அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் வினோத் பிரசாத் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக