ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதியில் வைத்து சிறுத்தைக்கு மருத்தவ சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுத்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.
இதனிடையே வன விலங்கை வேட்டையாட கண்ணி வைத்தாக கணவனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன்(50) பாலக்கோடு வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிடிபட்டுள்ள ரங்கநாதன் வீட்டிலிருந்து காட்டுபன்றி இறைச்சிகள், இதே போல, மான், காட்டு பன்றிகளை வேட்டையாடும் கம்பி வலைகள், கீரிப்பிள்ளை, முயல் உள்ளிட்டவைகள் பிடிக்கும் வலைகள், மின்சார ஒயர்கள், காட்டு பன்றி பிடிக்க வைக்கும் வாய் வெடிகள் உள்ளிட்டவைகளை பாலக்கோடு வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பிடிப்பட்டுள்ள ரங்கநாதன், பல வருடங்களாக வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்து வந்ததும், இது தவிர சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கருவேலன் மரப்பட்டைகளை வனப்பகுதியில் சேகரித்து சாரயம் காய்ச்சுபவர்களுக்கு விற்பனை செய்ததும் வனத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பாலக்கோடு வனத்துறையினர் ரங்கநாதனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக