அந்த டெண்டரின் போது, சிலரின் மணுக்கள் திட்டமிட்டு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், பெரும்பாலான டெண்டர்களை ஒன்றிய குழு தலைவர் பழனிசாமி, துணை தலைவர் தனபால் மற்றும் அவருக்கு வேண்டிய கவுன்சிலர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படுவதாகவும், அதற்கு 10 முதல் 15 சதவீதம் வரை கமிஷன் பெறுவதாகவும் இதைத் தவிர்க்க டெண்டர்கள் முறையாக நடைபெற வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடைப்பெற்ற ரூ.59 மதிப்பீட்டில் 16 பணிக்கான டெண்டரில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா டெண்டருக்கான நோட்டீஸ் அறிவிப்புகளை வழங்கினார். அதன் பிறகு ஒப்பந்ததாரர்களுக்கும், தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்களுக்கிடையே ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர்கள் . இதில் உடன்படாததால் பணிகள் 18 சதவீதம் முதல் 21 சதவீதம் வரை போட்டிப் போட்டு குறைத்து டெண்டர் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ௹பாய் 9 லட்சம் வரை மீதமாகும்.
இதனிடையே மீண்டும் தலைவர், துணைத் தலைவர் கவுன்சிலர்கள் ஒன்று கூடி இந்த டென்டரை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்றும் நடைபெற்ற முறையான டெண்டரை உறுதிப்படுத்தப்பட வேண்டும் இல்லை என்றால் திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு விரிவாக புகார்கள் அளிக்கப்படும் என்று ஒப்பந்ததாரர்கள் கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக