சிறுத்தை ஒன்றின் கழுத்தில் இரும்பு கம்பி இறுக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிாரம மக்கள் பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிறுத்தை இருந்த இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர்.
அருகே சென்றால் சிறுத்தை தாக்கலாம் என அஞ்சியதால், வன விலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தகை்கு மயக்க ஊசி செலத்துபட்டது, சிறுத்தை மயங்கியதும் கழுத்தை இறுக்கியிருந்த இரும்பு கம்பி அகற்றபட்டு காயங்களுக்கு சிகிச்சையளித்தனர்.
பின்னர் கூண்டில் அடைத்து இரவோடு இரவாக ஒகேனக்கல் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனர். இறைச்சிக்காக மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் வைத்த இரும்பு கண்ணியில் எதிர்பாராத விதமாக சிறுத்தை சிக்கியிருக்கிறது என்பது வனத்துறை விசாரனையில் தெரிய வந்திருக்கிறது, கண்ணியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் ஐந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்த்தனர்.
வன விலங்குகளை வேட்டையாட கண்ணி வைத்தவர்கள் யார் என்பது குறித்து வன துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக