தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே உள்ள ஓட்டலில் இன்று மாலை உணவருந்த வந்த 2 போதை ஆசாமிகள் ஒட்டலில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி அடித்து கொண்டனர். இருவரும் குடிபோதையில் இருந்ததால் இருவரும் விட்டு கொடுக்காமல் சன்டை செய்தனர்.
இதில் ஓட்டல் மேசையில் இருந்த உணவு பொருள் கீழே விழுந்து சேதாமானது, இவர்களது சண்டையை தடுக்க வந்த புரோட்டோ மாஸ்டரின் கை உடைப்பட்டது. உடனடியாக பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பாலக்கோடு போலீசார் போதை ஆசாமிகளை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக