தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள பூலாப்பட்டி ஏரியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி நொம்பு மண் கடத்துவதாக காரிமங்கலம் வருவாய் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து வருவாய் ஆய்வாளர் வடிவேலு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்றனர்.
அதிகாரிகளை கண்டதும் மண் அள்ள பயன்படுத்திய 7 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஜே.சி.பியை அங்கேயே விட்டு விட்டு கடத்தல்காரர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் வடிவேல் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் ஜே.சி.பி.யை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரனை செய்ததில் நொரம்பு மண் கடத்தலில் ஈடுட்பட்டது, கொட்டுமாரனஅள்ளியை சேர்ந்த சின்னசாமி (வயது.48) என்பதும் அதிகாரிகளை கண்டதும் தலைமறைவானதும் தெரிய வந்தது. தலைமறைவான சின்னசாமியை காரிமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக