தருமபுரி மாவட்டம், அரூரில் சத்தியம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கோவை ஆர்.வி.எஸ். கல்லூரி சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா கலந்து கொண்டு பேசுகையில் மாணவர்கள் போதை பொருள் மீது மோகம் கொள்வதை தவிர்த்து கல்வியின் மீது மோகம் கொள்ள வேண்டும் போதைபொருள் பயன்பட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். கோவை ஆர்.வி.எஸ். கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ம.பழனிசாமி பேசுகையில் டிஜிட்டல் யுகத்தில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அதில் உள்ள வேலை வாய்ப்பு குறித்தும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதுகலை ஆசிரியர் டி.இளவரசன் பள்ளியின் துணைமுதல்வர் எம்.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக