தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலை பிரிவு ரோட்டில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து கனரக லாரிகள் விபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது. பாலக்கோடு நகரில் இருந்து ராயக்கோட்டை, ஓசூர், பெங்களூர் மற்றும் காரிமங்கலம், காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்டவை இரவு பகலாக இயக்கி வருகிறார். நகரில் போக்குவரத்து வரத்து நெரிசல் ஏற்படுவதால் கனரக வாகனங்கள் மற்றும் ஒரு சில வாகனங்கள் புறவழிச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஓசூர் பகுதிக்கு செல்ல கனரக லாரி ஒன்று புறவழிச்சாலை பிரிவில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இப்பகுதியில் உயர்மின் கோபுர மின்விளக்கு, எச்சரிக்கை சிக்கல் இல்லாததால் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
எனவே மாவட்டம் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் உயர்மின் கோபுர மின்விளக்கு மற்றும் எச்சரிக்கை சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக