தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பால்வண்ணநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத பெளர்னமியன்று கார்த்திகை தீபா திருவிழாவை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இன்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பால் வண்ணநாதருக்கு பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டு, கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
ஸ்ரீ பால்வண்ணநாதர் தீப ஒளியில் காட்சியளித்தார். மலைமீது மகாதீபம் ஏற்றியவுடன் கோவில் முழுவதும் தீபம் ஏற்றப்பட்டது, இதை அடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், பக்தர்கள் சிவனடியார்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக