தலைமை ஆசிரியர் - ஆசிரியர்கள் இடையே மோதல், பள்ளி வளாகத்திலேயே மன உளச்சலால் வேளாண் ஆசிரியர் தூக்கிட முயற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 நவம்பர், 2023

தலைமை ஆசிரியர் - ஆசிரியர்கள் இடையே மோதல், பள்ளி வளாகத்திலேயே மன உளச்சலால் வேளாண் ஆசிரியர் தூக்கிட முயற்சி.


பென்னாகரம் ஆண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் இடையே குழு மோதல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகிய வேளாண்மை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிடும் முயற்சித்த போது சக ஆசிரியர்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் போளூர் நான்கு சாலை சந்திப்பு பகுதி அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பெண்ணாகரம், ஒகேனக்கல், தாசம்பட்டி, முதுகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து சுமார் 726 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக லோகநாதன் உள்ளார். 


இதே பள்ளியில் பாலக்கோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வேளாண்மை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாணவர்களுக்கான இறை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர், மாணவர்கள் முன்னிலையில் வேளாண்மை ஆசிரியரை தரக்குறைவாக பேசியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மனமுடைந்த வேளாண்மை ஆசிரியர் புதன்கிழமை காலை தலைமை ஆசிரியரிடம், பொதுவெளியில் கருத்துக்களை தெரிவிக்காமல் ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை வழங்குமாறு தெரிவித்துள்ளார். 


இதனை தலைமை ஆசிரியர் ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமடைந்த வேளாண்மை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட முயற்சித்த போது சக ஆசிரியர்கள் காப்பாற்றி சிகிச்சைக்காக பெண்ணாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் உயர் சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 


இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் குறியதாவது, பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 41 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம். பள்ளியின் தலைமை ஆசிரியர், ஒரு சில ஆசிரியர்களை குழுவாக அமைத்து கொண்டு அவ்வப்போது சக ஆசிரியர்களை பொதுவெளியில் இழிவுபடுத்தி பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சில ஆசிரியர்களிடம் தவறாக பேசுவதால் பள்ளியில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 


இந்த விவகாரத்தில் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்  , பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரனை  மேற்கொண்டு, ஆசிரியர் தலைமை ஆசிரியர் குழு அதிகாரமோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad