சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 நவம்பர், 2023

சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.


பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது. குழந்தைகள் தின விழாவின் சிறப்பு நிகழ்வாக மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்தார்கள். குழந்தைகள் தின விழா சார்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி குழந்தைகளுக்கு ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் குழந்தைகள் மீது நேரு வைத்திருந்த அன்பு, பாசம், பற்று உள்ளிட்டவைகள் பற்றி விளக்கினார்.


இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்கள் என்பதை உணர்ந்து குழந்தைகள் இந்த பருவத்தில் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டு ஒழுக்கத்துடன் கல்வி கற்று எதிர்காலத்தில் சிறந்து விளங்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி,  கல்பனா, திலகவதி ரேக்கா, ராஜேஸ்வரி சத்துணவு பணியாளர்கள் மாணவர்கள் கலந்துக் கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad