அந்தாளிகொட்டாய் கிராமத்தில் விவசாய பயிரை அழித்து அட்டூழியம், நடவடிக்கை எடுக்க கோரி தாசில்தாரிடம் மனு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 நவம்பர், 2023

அந்தாளிகொட்டாய் கிராமத்தில் விவசாய பயிரை அழித்து அட்டூழியம், நடவடிக்கை எடுக்க கோரி தாசில்தாரிடம் மனு.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த அந்தாளிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆண்டி கவுண்டர் (வயது. 65) இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஒட்டி ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் கடந்த 60 வருடமாக விவசாயம் செய்து வருகிறார்.


இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மகாலிங்கம் என்பவர் ஆண்டி கவுண்டர் நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாய பயிர்களை  வீட்டில் ஆண்கள் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து வெளியூரை சேர்ந்த அடியாட்களை அழைத்து வந்து விவசாய பயிர்களை அழித்து நாசம் செய்ததுடன் பெண்கள் தாக்கப்பட்டு பாலக்கோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அத்துடன் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அத்துமீறி கற்களை கொண்டு நிலத்தை பாழ்படுத்தி உள்ளதாகவும், மாரண்டஅள்ளி போலீசார் அவர்களுக்கு உடந்தையாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி இன்று பாலக்கோடு டி.எஸ்.பி மற்றும் தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர்.


மேலும்  மாவட்ட ஆட்சியர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 15க்கும் மேற்பட்ட அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad