இப்பயிற்சியில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள், தங்கள் குடியிருப்புகளைச் சார்ந்த பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பங்கு, TNSED PARENT APP ல் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை தங்கள் பள்ளியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பதிவிடுதல் உள்ளிட்டவை குறித்து ஆசிரியர் பயிற்றுநர் திரு.அருண்குமார் மற்றும் கருத்தாளர் திரு.அறிவழகன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
இப்பயிற்சியில் அவ்வையார் குறுவள மையத்துக்குட்பட்ட 15 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்கள் துணைத்தலைவர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள் உட்பட 72 பேர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக